இலங்கை்கு சட்டபூர்வமான வழிகளில் பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும், மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்துக்குரிய, விண்ணப்பம் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் https://si.labourmin.gov.lk என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதற்கு மூலம் அதற்கு விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
வங்கி முறையின் ஊடாக சட்டரீதியாக பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை வழங்குவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளதுடன், புலம்பெயர் பணியாளர்கள் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு முன்னதாக அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு மற்றும் அனுமதி வழங்கும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி முதல் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இலங்கைக்கு 3000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வங்கி முறைமை மூலம் பணம் அனுப்பிய புலம்பெயர் பணியாளர்களுக்கு அவர்கள் அனுப்பிய பணத்தின் அளவில் 50 சதவீதம் பெறுமதியான மின்சார மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த வருடம் மே முதலாம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இருபது அமெரிக்க டொலர்களை அனுப்பும் பணியாளர்கள் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கி முறையின் ஊடாக சட்டரீதியாக பணம் அனுப்பும் பணியாளர்களுக்கு, விமான நிலையத்தில் கிடைக்கும் தீர்வை வரிச் சலுகையை 6550 அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கும் அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.