மின்னல் தாக்கத்தில் பலத்த பாதிப்பு

0
94

வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவு மின்னல் தாக்கத்தினால் பலத்த சேதமடைந்துள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலத்த மழையுடன் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இந்த மின்னல் தாக்கியதாகவும், விசேட சிகிச்சைப் பிரிவில் மூன்று நோயாளர்கள் இருந்ததாகவும், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். மின்னல் தாக்கத்தினால் விசேட சிகிச்சை பிரிவில் இருந்த பெறுமதியான சுகாதார உபகரணங்கள் பல சேதமடைந்துள்ளன. நூறு லட்சத்தை தாண்டும் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன