மின்மாறி, மின்கம்பம், பஸ் தரிப்பிடம் மூன்றையும் மோதிய பஸ் : இருவர் காயம், மொரட்டுவையில் சம்பவம்!

0
117

பாணந்துறை – நுகேகொட பாதையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று மொரட்டுவை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பஸ் நிலையம்இ மின்மாற்றி மற்றும் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை பஸ் இழந்ததால் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மின்மாற்றி மற்றும் பஸ் நிலையத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன் நடத்துனரும் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணும் சிறிய காயங்களுக்குள்ளாகினர்.

சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ மொரட்டுவ பொலிஸாரினால் மேலதிக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.