நாட்டின் நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு, மின்சாரப் பட்டியல் நிலுவையை செலுத்தாவர்களின் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என, வவுனியா பிரதம மின் பொறியியலாளர் ஜோ.அ.ராஜ்குமார் அறிவித்துள்ளார். தற்பொழுது, நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, இலங்கை மின்சார சபை, மின்சாரப் பட்டியல் நிலுவையை அறிவிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், மின் துண்டிப்பு மூலம் ஏற்படும் அசௌகரியத்தை, மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், வவுனியா பிரதம மின் பொறியியலாளர் ஜோ.அ.ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.