அம்பாறை சொறிக்கல்முனை புட்டியாறுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பெண்ணை, முதலை இழுத்துச் சென்ற சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது.
சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயதான பெண்ணொருவரையே முதலை இழுத்துச் சென்றுள்ளது.
அம்பாறையில் பல இடங்களிலும், மழை பெய்து வருவதால், நீர் நிலைகளில், நீர் மட்டம் உயர்வடைந்து செல்கின்றது.முதலைகளின் நடமாட்டமும் அதிகரித்துக் காணப்படும் நிலையிலேயே, புட்டியாறுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பெண்ணை, முதலை இழுத்துச் சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணைத் தேடும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன.இதேவேளை முதலை நடமாட்டம் உள்ள இடங்கள், அபாயகரமான பிரதேசங்களில், பிரதேச சபைகள் ,சுற்றுச் சூழல் அதிகாரிகள், வன பரிபாலன சபையினர், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.