29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மீளப் பெற்றுக்கொள்ளும் பணத்தை செலுத்தி ஹஜ் பயணத்தை உறுதி செய்யுங்கள்

வூதி அரசாங்கம் இவ்வருடம் இலங்கையிலிருந்து 3,500 யாத்திரிகள் ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

2019ஆம் ஆண்டிலிருந்து புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக ஏற்கனவே திணைக்களத்தில் மீளப் பெற்றுக்கொள்ளும் தொகையாக ரூபாய் 25,000 செலுத்தி, உறுதி செய்துகொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும்  தீர்மானித்துள்ளன.

இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக விருப்பம் கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். 

அத்துடன் மீள பெற்றுக்கொள்ளும் தொகையான ரூபாய் 25,000 இலங்கை வங்கியின் 2327593 (Hajj Account) என்ற கணக்கிலக்கத்துக்கு வைப்பு செய்து, வங்கியின் பற்றுச்சீட்டின் மூலப்பிரதியை திணைக்களத்துக்கு நேரடியாக வருகை தந்து சமர்ப்பித்து, பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொண்டு ஹஜ் பயணத்தை உடனடியாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

இதேவேளை, ஹஜ் யாத்திரிகள் தெரிவு பற்றுச்சீட்டின் இலக்க முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles