ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று அத்துருகிரியவில் உள்ள விஜேதாச ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது.இதில், கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் வந்தார்.இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டபோது, தேர்தல் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனங்களை பயன்படுத்தாது முச்சக்கரவண்டியில் வந்ததாக அவர் தெரிவித்தார்.