பெற்றோல் விலை 10 ரூபாவில் குறைக்கப்பட்டபோதிலும் முச்சக்கர வண்டி கட்டணங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்டணங்களைக் குறைப்பதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு மிகவும் சிறந்த சேவையை வழங்குவதற்காக முறையான விதிமுறைகளை செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என சங்கத் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
பெற்றோல் விலை லீற்றர் ஒன்றுக்கு 10 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதால் கிலோமீட்டர் ஒன்றுக்கு 50 சதம் குறைப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.