முச்சக்கர வண்டி விபத்து ; அறுவர் காயம்!

0
14

கதுருவெல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று, பொலன்னறுவை, மனம்பிடிய நகருக்கு அருகில் வைத்து மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்ற போது, ​​இரண்டு முச்சக்கர வண்டிகளும் மோதிக் கொண்டு வீதியில் கவிழ்ந்துள்ளதாக மனம்பிடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கர வண்டிகளில் பயணித்த மூன்று வயது சிறுமி உட்பட ஆறு பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெசாக் கொண்டாடுவதற்காக பொலன்னறுவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹசலக மற்றும் திம்புலாகல பகுதிகளைச் சேர்ந்த குழுவினரே  இவ்வாறு விபத்துக்குள்ளானதாக மனம்பிட்டிய  பொலிஸார் கூறுகின்றனர்.