நாட்டில் முட்டைக்கான உற்பத்தி செலவு ரூபா 30 ஆக காணப்படும் நிலையில் முட்டையொன்றின் விற்பனை விலை ரூபா 60 ஆக காணப்படுவதுடன் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளினாலேயே இவ்விலை அதிகரிப்பு ஏற்படடுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமவீர தெரிவித்துள்ளார்.
முட்டை வியாபாரிகளினாலும் முட்டை உற்பத்தியாளர்களினாலும் ஏற்பட்டுள்ள அழுத்தத்திலிருந்து மக்களை விடுவிப்பதற்காக முட்டைக்கான அதிக பட்ச சில்லறை விலையை விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த அதிக பட்ச சில்லறை விலை அடுதத்த வாரத்தில் நுகர்வோர் அதிகார சபைக்கு சமர்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.