முட்டை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி

0
100

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மீண்டும் ஒருமுறை அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மே மாதத்தில் முட்டையின் விலை கணிசமாக குறைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், முன்னதாக இந்திய முட்டை இறக்குமதியை நிறுத்தியதன் பின்னர், சில வர்த்தகர்கள் முட்டை விலையை தன்னிச்சையாக அதிகரித்துள்ளன என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.