முட்டையின் விலை அதிகரிப்பினால் பண்டிகைக் காலங்களில் பேக்கரி உரிமையாளர்கள் கேக் உற்பத்தி செய்யவில்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பெரியளவிலான பேக்கரிகளின் உரிமையாளர்களே சுமார் 25 சதவீதமளவில் கேக் உற்பத்திகளை மேற்கொண்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.தற்போது சந்தையில் முட்டையொன்றின் விலை 55 ரூபாவாக அதிகரித்துள்ளது.