முட்டை விலை அதிகரிப்பு

0
119

பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டை விலை அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 முதல் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளை முட்டை ஒன்றின் விலை தற்போது 47 முதல் 50 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு நிற முட்டை ஒன்று 53 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முட்டை விலை அதிகரிப்பது வழமை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிக்கப்படாது என முட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.எம். சரத் ​​ரத்நாயக்க முன்னதாக தெரிவித்தார்.