முட்டை 30 ரூபாய்… முட்டை ரொட்டி 130 ரூபாய்… என்ன கணக்கு இது?

0
6

முட்டை விலை குறைந்திருந்தாலும், முட்டை ரொட்டி மற்றும் கொத்து ரொட்டியின் விலை முன்பு போலவே இருப்பதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

ஒரு முட்டையின் விலை 45 முதல் 50 ரூபாய் வரை இருந்தபோது, ஒரு முட்டை ரொட்டியின் விலையை 125 முதல் 130 ரூபாய் வரை உயர்த்த ஹோட்டல் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால், இப்போது ஒரு முட்டையின் விலை 29 மற்றும் 32 ரூபாய் வரை குறைந்துள்ள போதும், முட்டை ரொட்டி இன்னும் அதே விலையில் விற்கப்படுகிறது.

முட்டை விலை குறைந்ததால் கொத்து ரொட்டியின் விலை குறைக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், அதுவும் குறைக்கப்படவில்லை.