28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முதலாவது வெற்றியை சுவைத்தது தம்புள்ள சிக்சர்ஸ்

ரங்கிரி, தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5ஆவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 10ஆவது போட்டியில் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை எதிர்த்தாடிய தம்புள்ள சிக்சர்ஸ் அணி 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. இந்த வருட லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் தம்புள்ள சிக்சர்ஸ் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். முதல் 3 போட்டிகளில் தோல்வி அடைந்த தம்புள்ள சிக்சர்ஸுக்கு இந்த வெற்றி உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

குசல் ஜனித் பெரேரா, ரீஸா ஹெண்ட்றிக்ஸ் ஆகியோர் அற்புதமாக துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்து தம்புள்ள சிக்சர்ஸ் அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றினர்.கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 186 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்சர்ஸ் 17.5 ஓவர்களில் 2 விக்கெட் களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர்காள ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குசல் பெரேரா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 88 பந்துகளில் 154 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுவான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.ஆனால், 15ஆவது ஓவரில் தஸ்கின் அஹ்மதின் பந்துவீச்சில் இருவரும் ஆட்டம் இழந்தனர். ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 39 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களையும் குசல் பெரேரா 50 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் குவித்தனர்.

தொடர்ந்து மார்க் சப்மனும் லஹிரு உதாரவும் வெற்றிக்கு தேவைப்பட்ட எஞ்சிய 33 ஓட்டங்களை மேலதிக விக்கெட் இழப்பின்றி பெற்றுக்கொடுத்தனர்.மார்க் சப்மன் 23 ஓட்டங்களுடனும் லஹிரு குமார 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கலம்போ ஸ்ட்ரைக்ர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்தது. முன்வரிசை வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ், ஏஞ்சலோ பேரேரா, க்லென் பிலிப்ஸ் ஆகிய மூவரும் சிறந்த பங்களிப்வை வழங்கியதன் மூலமே கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

ரஹ்மானுல்லா குர்பாஸ் (36), ஏஞ்சலோ பெரேரா (41) ஆகிய இருவரும் 51 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.க்லென் பிலிப்ஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 52 ஓட்டங்களைப் பெற்றதுடன் 6ஆவது விக்கெட்டில் சாமிக்க கருணரட்னவுடன் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.சாமிக்க கருணாரட்ன 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மொஹமத் நபி 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நுவன் ப்ரதீப் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles