முதலீடு மற்றும் வியாபாரத்தை ஊக்குவிப்பதில் அதிகாரவர்க்க ஆட்சி பாரிய தடை!

0
169

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் வர்த்தக வசதிகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு உள்ள தடைகளை நீக்கி, நாட்டில் வர்த்தகம் மேற்கொள்வதை எளிதாக்கும் வகையில் சட்டம் கொண்டுவர எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், முதலீடு மற்றும் வியாபாரத்தை ஊக்குவிப்பதில் அதிகாரவர்க்க ஆட்சி பாரிய தடையாக உள்ளது என சுட்டிக்காட்டிய அவர், நிர்வாக செயற்பாடுகளுக்கு அரச சேவை முகாமைத்துவ கொள்கையே தேவை எனவும் தெரிவித்தார்.