29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முன்னாள் அமைச்சரின் மகன் ரொட்னி பெரேராவை, ஜப்பானிய தூதுவராக நியமிக்குமாறு பரிந்துரை!

முன்னாள் அமைச்சர் போல் பெரேராவின் மகன் ரொட்னி பெரேராவை, ஜப்பானிய தூதுவராக நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானின் இலகு தொடரூந்து திட்டம் இரத்து செய்யப்பட்டமையை அடுத்து, தகர்ந்துபோயுள்ள ஜப்பானுடனான ராஜதந்திர உறவை மேம்படுத்தும் வகையில், இந்த நியமனம் அமையவுள்ளது.
ஏற்கனவே, ஜப்பானுக்கான தூதுவராக, கடற்படையின் முன்னாள் அதிகாரியும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளருமான அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
எனினும் ஜப்பானுடனான உறவை பலப்படுத்த, படை அதிகாரி ஒருவரின் நியமனம் பொருத்தமற்றது என்ற அடிப்படையில், ரொட்னி பெரேராவின் பெயர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிர்வாகத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், ரொட்னி பெரேரா, ஏற்கனவே இலங்கையின் தூதுவராக வோஷிங்டனில் பணியாற்றினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles