முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் மீள அழைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும், தெரிவித்துள்ளார்.