முன்னாள் நிதியமைச்சர் மன்னாருக்கு திடீர் விஜயம்!

0
154

முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தருமான ரவி கருணாநாயக்க இன்று காலை மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். விசேட உலங்குவானூர்தி மூலம் காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தார். மன்னாரிற்கான திடீர் விஜயம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது எவ்வித பதிலும் கூறாமல் அவ்விடத்தில இருந்;து, வாகனம் ஒன்றில் ஏறி சென்றார். முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் ரி.எஸ்.எப் என அழைக்கப்படும் தனியார் கடல் உணவு உற்பத்தி நிலைய பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.