முற்போக்கு தமிழர் கழகம் இளைஞர் பாசறை நடாத்திய இளைஞர் மாநாடு இன்று மட்டக்களப்பில் எழுச்சியாக நடைபெற்றது.
கழகத்தின் பொது செயலாளர் யோகநாதன் ரோஸ்மன் தலைமையில், இளைஞர் மகா நாட்டுக்கான இளைஞர் பேரணி மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமானது. பெருமளவான இளைஞர், யுவதிகள், கழக உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். பேரணி மட்டக்களப்பு நகர் பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு மாநகர சபை மகாநாட்டு மண்டபத்தை வந்தடைந்தது.
மௌன வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் உயிர் நீத்த கழக உறுப்பினருக்கான அஞ்சலி நிகழ்வும் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இடம்பெற்று கழக உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வுடன் முற்போக்கு தமிழர் கழகம் இளைஞர் பாசறை நடாத்தும் 2024 இளைஞர் மாநாட்டு நிகழ்வு ஆரம்பமானது. இளைஞர் பேரணி மற்றும் 2024 இளைஞர் மாநாட்டு நிகழ்விலும் பிரதம விருந்தினராக முற்போக்கு தமிழர் கழக தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் கலந்து கொண்டார்.