‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலக அலுவலகங்களை உள்ளடக்கும் வகையில் 600 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் சற்று முன்னர் நடைபெற்றதோடு இவர்களுக்கான காணி உறுதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைத்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” திட்டத்தின் கீழ் 1,376 முழுஉரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.