மேன் முறையீடு செய்ய இனி கொழும்பு செல்லத் தேவையில்லை – வாட்ஸ் ஆப் போதும்!

0
131

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைவில்லை என்றால், மேன்முறையீடு செய்யும் நடவடிக்கைக்கு கொழும்பு அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, என ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே, ஆணைக்குழு அதிகாரிகளால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கேள்வி ஒன்று கேட்கப்பட்டு 14 நாட்களுக்குள் பதில் வழங்கப்படும். அவ்வாறு பதில் வழங்கப்படாவிடின், மேன் முறையீட்டுக்காக கொழும்பு அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. வடக்கில் இருந்து கொழும்பு செல்வதென்றால் பல்வேறு இடர்கள் காணப்படுகிறது.

ஆகவே பொது மக்களின் அசௌகரியங்களை குறைப்பதற்காக, இனி வரும் காலங்களில் வாட்ஸ் ஆப் நடைமுறை பின்பற்றப்படும். இது தவிர அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த, பொருத்தமான அலுவலகங்கள் ஊடாக சூம் தொழில் நுட்பம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.