நாட்டில் பண்டிகைக் காலத்தில் மலைநாட்டு மரக்கறிகளின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, இன்றைய தினம் கெப்படிப்பொல பொருளாதார மையத்தில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்ட விலைகள் இவ்வாறாக அமைந்துள்ளன.
ஒரு கிலோ கிராம் கரட்டின் மொத்த விலை 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.ஒரு கிலோ கிராம் போஞ்சி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 180 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.இதேவேளை, ஒரு கிலோ கிராம் தக்காளி 200 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கோவா 250 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.