29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மேலும் 1,550 மில்லியன் ரூபா அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது

பயனாளிகளுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மேலும் 1,550 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் 257,170 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, பயனாளிகளின் கணக்கில் வங்கிகள் நாளை வரவு வைக்கும்.

மீதம் உள்ள பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை நலன்புரிப் நன்மைகள் சபை கணக்குகளை சரிபார்த்த பின்னர் செலுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட பின்னர் அனைத்து பயனாளிகளுக்கும் ஒகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகளை ஒரே நேரத்தில் வழங்க முடியும்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க முதற்கட்டமாக 791,000 பயனாளிகளுக்கு 5,016 மில்லியன் ரூபாவும்இ இரண்டாவது கட்டத்தில், 1,048,170 குடும்பங்களுக்கு 6,566 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான ஆய்வுகள் முடிந்தவுடன் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles