கிராம அலுவலராக கடமையாற்றி வரும் தனது மனைவி பழிவாங்கப்பட்டு கட்டாய பணியிடம் மாற்றப்பட்ட நிலையில் குறித்த பணியிட மாற்றமானது நீதி அற்ற நியாயமற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளதாக கிராம அலுவலரின் கணவரான செல்வரத்தினம் கிருஸ்ணரூபன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வரட்சி நிவாரண தெரிவு பட்டியிலில் இடம்பெற்ற முறைகேடான தெரிவு எனும் அடிப்படையிலேயே குறித்த பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் , தனது மனைவியான கிராம அலுவலர் சுற்றுநிருப விதி முறைகளுக்கு அமைவாகவே குறித்த தெரிவு பட்டியலை வழங்கியுள்ளார் என்றும் ஆனால் ஒருசில அதிகாரிகளை திருப்தி படுத்துவதற்காக தனது மனைவிக்கு கட்டாய பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட ஆலங்குளம் கிராம சேவகராக கடமையாற்றி வந்த கிராம அலுவலரே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் கடந்த 2019ல் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது கணவரான செல்வரத்தினம் கிருஸ்ணரூபன் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
2017ஆம் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட ஆலங்குளம் பகுதியில் குறித்த கிராம அலுவலர் கடமையாற்றி வந்துள்ளார் ,அந்த காலப்பகுதியில் வரட்சி நிவாரண பட்டியல் வழங்கப்பட்டிருந்தன.
இதேவேளை குறித்த கிராம அலுவலர் பிரிவில் உள்ள குடும்பஸ்தர் நிறுவனமொன்றில் குறித்த காலப்பகுதியில் பணியாற்றி வந்துள்ளார் , குறித்த குடும்பஸ்தரும் வரட்சி நிவாரணம் பெற்று கொள்ளும் முகமாக விண்ணப்பித்திருக்கின்றார், நிறுவன ஊழியராக கடமையாற்றுகின்றார் எனும் ரீதியில் குறித்த குடும்பஸ்தருக்கான வரட்சி நிவாரண வேண்டுகை கிராம அலுவலரால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த நிராகரிப்பு தொடர்பில் அப்போதைய பிரதேச செயலாளர் கிராம அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டிருந்த நிலையில் குறித்த கிராம அலுவலர்க்கு தெரியாமல் வரட்சி நிவாரணம் மேற்கூறிய நிறுவன ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ளது . அத்துடன் தனக்கு நிவாரண உதவி மறுக்கப்பட்டதன் காரணத்தை கண்டறிய பல்வேறு முயற்சிகள் நிறுவன ஊழியராலும் எடுக்கப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் அப்போதைய முல்லைத்தீவு மாவட்ட செயலாளரினால் மூவர் அடங்கிய விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்ததுடன். முடிவில் குறித்த ஆலங்குளம் கிராம அலுவலர் தெரிவு பட்டியலினை முறைகேடாக தெரிவு செய்ததாக அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
குறித்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட செயலகத்தினரால் ஆலங்குளம் கிராம அலுவலர்க்கு பணியிட மாற்றம் வழங்கப்படிருந்தது.
குறித்த கட்டாய பணியிட மாற்றத்தை எதிர்த்து கிராம அலுவலர் மேன்முறையீடு செய்தும், தெரிவு பட்டியல் தவறு என்ற காரணத்தை கூறி குறிப்பிட்ட நாட்களுக்குள் மாறப்பட்ட இடத்தில் கடமையை பொறுப்பேற்குமாறும் கூறப்பட்டிருந்தது.
இதேவேளை துணுக்காய் பிரதேச செயலக வேறு கிராம சேவகர் பகுதிகளில், யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவரின் பெயரும் வரட்சி நிவாரண தெரிவு பட்டியலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தனது மனைவி மேலதிகாரிகளால் பழிவாங்கப்படுவதாக அவரது கணவர் தெரிவித்திருந்தார்.
கிராம அலுவலரான தனது மனைவி பகிவாங்கப்பட்டதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் தன்னால் அனுப்பப்பட்டுள்ளதாகவும் , அதனடிப்படையில் குறித்த பிரச்சனைக்கான தீர்வினை ஜானதிபதி பெற்றுத்தரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.