ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கொண்டாட்டம் தொடர்பாக உள்ளூர் மட்டத்தில் அமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மே தின அமைப்பு செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று ஐ.தே.க தலைவர் வஜிர அபிவர்தன தலைமையில் லுணுகம்வெஹர பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுடன், திஸ்ஸமஹாராம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ஐ.தே.க தலைவர்களும் அத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.தே.க செயற்பாட்டாளர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மருதானையில் 100,000 பேரின் பங்கேற்புடன் ஐக்கிய தேசியக் கட்சி மே தினத்தை கொண்டாடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.