மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகில் விபத்து ; இரு இளைஞர்கள் படுகாயம்!

0
11

மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (09) இரவு 09.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பின்னர் அருகிலிருந்த பஸ் தரிப்பிடத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் பஸ் தரிப்பிடத்தில் இருந்த இளைஞனும் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தினையடுத்து காரின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும், விபத்தின் போது காரின் சாரதி மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.