அனுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தில்லன்கல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
நேரியகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் தனது மனைவியுடன் வயலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இவ்வாறு காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது இவரது மனைவி எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.