மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் மரணம்!

0
12

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் மரணமடைந்துள்ள சம்பவம் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 9.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு நண்பர்கள் கிண்ணியாவுக்கு சென்று ஓட்டமாவடி பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி இருவர் மரணமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனிச்சங்கேணி பாலத்தில் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில், ஓட்டமாவடி – பதுரியா நகர் ஆலையடி வீதியைச் சேர்ந்த முகம்மது உசனார் அப்துல் சாஜித், ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியைச் சேர்ந்த முகம்மது அஸ்மி முகம்மது அஸாம் எனும் 19 வயதுகளுடைய இரு இளைஞர்களே மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்த இளைஞர்களின் ஜனாஸாக்கள் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக நள்ளிரவு 2 மணி அளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.