யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் இருப்பதாகஇ யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் இருப்பதாகஇ யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்இ யாழில் பல பகுதிகளிலும் இன்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று காலை யாழ்ப்பாணம் பெரிய கோயிலில் விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.
டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரணஇ யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் மற்றும் வைத்தியர்கள்இ சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்இ இவ் ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரையான காலப் பகுதியில் டெங்கு நோய்த் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.