யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று (08) மாலை இனங்காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் தொடர்பில் தெரியவராத நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.