யாழ்ப்பாணம் – சுன்னாகம் சந்தி பகுதியில்நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை திருடி தப்பி சென்ற திருடர்கள் மோதியதில் குறித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்விபத்தில் 50 வயதுடைய ராசா ரவிச்சந்திரன் என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் மதுபான நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை, தென்மராட்சியைச் சேர்ந்த இருவர் திருடி தப்பியோடுவதனை மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
இதனை அவதானித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் உள்ளிட்டோர், திருடர்களை துரத்திச் சென்ற நிலையில், திருடர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் வந்த மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தினை ஏற்படுத்திய இருவரையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.