யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம யாத்திரையை முன்னெடுத்த, யாத்திரி ஒருவர், மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தங்கியிருந்த வேளை உயிரிழந்துள்ளார்.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து யாத்திரையை ஆரம்பித்த சிங்கரராஜா ஜெயராஜா தலைமையிலான 60 பேரடங்கிய யாத்திரிகர்கள் குழு, நேற்று மாலை மாமாங்கத்தை வந்தடைந்தது.
நேற்றிரவு மாமாங்கம் ஆலயத்தில் இளைப்பாறிவிட்டு, இன்று அதிகாலை யாத்திரையை முன்னெடுக்க இருந்த நிலையிலேயே, யாத்திரையில் பங்கெடுத்த யாழ்ப்பாணம் கைதடி மத்தியை சேர்ந்த 74 வயதுடைய சிவலிங்கம் இராசையா எனும் முதியவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவத்திடற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.