யாழ்.வடமராட்சியில் விபத்து!

0
167

யாழ்ப்பாணம் வடமராட்சி மாலை சந்தைப் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த தனியார் கல்வி நிலையத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துச் சம்பவம் நேற்றிரவு 8.35 மணியளவில் சம்பவித்துள்ளது.வீதியில் குறுக்கே திடீரென மாடு நுழைந்த நிலையில், மாட்டுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக, முச்சக்கர வண்டியை வீதியின் மறுதிசைக்கு கொண்டு செல்ல சாரதி முற்பட்டுள்ளார்.இதன்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி, வெள்ள வாய்க்காலுக்கு மேலாக பாய்ந்து, அருகில் இருந்த தனியார் கல்வி நிலைத்திற்குள் நுழைந்தது. முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்தது.விபத்தில் முச்சக்கரண வண்டிச் சரதியான 50 வயதுடைய மாம்பழம் மகேந்திரன் என்பவர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்துத் தொடர்பான விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றர்.