ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில் ரணில் விக்கிரமசிங்க தனது முகப்புத்தகத்தில் பதவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் ”இங்கு இன்று காலை 9 மணி முதல் இலங்கைக்கான எனது கொள்கை பிரகடணம் முன்மொழியப்படும்.
அடுத்த ஐந்து வருடங்கள் என்னால் முடிந்த அனைத்தையும் நாட்டுக்காக செய்வேன். நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவேன். அடுத்த ஐந்து வருடங்களும் இலங்கைக்கு வெற்றிகரமானது.” என குறிப்பிட்டுள்ளார்.