கம்பஹா ரயில் நிலையத்திலிருந்து நேற்றிரவு (18) கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹாவிலுள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற இந்த மாணவர் கம்பஹா பஹல்கம பிரதேசத்தில் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ரயிலில் மோதி உயிரிழந்தாரா அல்லது ரயிலில் இருந்து குதித்து உயிரிழந்தாரா என்பது தொடர்பில் கம்பஹா தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனையை கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.