ரஷ்யாவுடனான போரில், உக்ரைன் நிச்சயம் வெற்றிபெறும். நிலங்களை மீட்பதிலும், நீதியை மீட்டெடுப்பதிலும் வெற்றி பெறுவோம். எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல்விடமாட்டோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உக்ரைன் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
‘உக்ரைன் பயங்கர நாட்களைக் கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பி வந்துள்ளோம். இந்த வார்த்தைகளுக்குப் பின்னால், பெரிய முயற்சிகள் இருந்துள்ளன. கீவ், செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகள், எங்களுடைய கார்கிவ் பகுதிக்கு மீண்டும் நாங்கள் திரும்பி வந்தமை, கெர்சன் நகருக்கு திரும்பி வந்தமை, பாக்முத் மற்றும் தொன்பாஸ் நிலங்களை பாதுகாத்தமை, என்பது உக்ரைனியர்களின் வீரம். இதனை இந்த உலகம் மறக்காது’ என
ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.