ரஸ்யாவில் உள்ள சரடோவ் நகரில் அமைந்துள்ள 38 மாடிக் கட்டடம் மீது உக்ரைன் தாக்குதல் நடாத்தியுள்ளது. ட்ரோனின் உதவியுடன் இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பாணியில் இத் தாக்குதல் அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாகவும், கட்டடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.