அரசாங்கம், அதன் வங்குரோத்து நிலையை அறிவித்தி ருக்கின்றது. கடன்களை திரும்பிச் செலுத்தும் நடைமுறைகளை நிறுத்தியிருக்கின்றது. பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட காலத்திலிருந்து, இலங்கை தீவை, மாறி, மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் எவையும் நாட்டின் வங்குரோத்து நிலையை
அறிவித்ததில்லை.
சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின்போது, நாடு கடுமை யான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்த காலத்தில் கூட, வங்குரோத்து நிலைமையை அரசாங்கம் முன்வைக்கவில்லை. ஆனால், இலங்கையின் வரலாற்றில் அனைவரை விடவும், சிங்கள- பௌத்த தேசியத்தை பாதுகாக்கக்கூடியவர்கள் நாங்கள்தானென்று, பிரகடனம் செய்தவர்கள்தான், தற்போது நாட்டின் வங்குரோத்து நிலையை அறிவித்திருக்கின்றனர். இதன் மூலம் ராஜபக்ஷக்கள் முற்றிலுமாகத் தோல்வியடைந்திருக்கின்றனர். சிங்கள – பௌத்த வாதத்தின் ஊடாக இந்த நாட்டை எல்லாக் காலத்திலும் ஆட்சி செய்
யலாம் என்று திட்டம் தீட்டியவர்கள், நாட்டை மீட்க திட்டங்களற்று இருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகொண்ட மையே ராஜபக்ஷக்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. போர் வெற்றியில்லா விட்டால் ராஜபக்ஷக்கள் என்னும் தென்னிலங்கை சகாப்தமொன்று ஆரம்பித்திருக்காது. விடுதலைப் புலிகளை அழித்தவர்கள் என்னும் பெருமையே ராஜபக்ஷக்களை சிங்கள மக்கள் மத்தியில் – குறிப்பாக மத்தியதரவர்க்க, அடித்தள மக்களின்
கதாநாயகர்களாக்கியது. கதாநாயக நிலையை குடும்ப அரசியலுக் கான சந்தர்ப்பமாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ராஜபக்ஷ க்களின் குடும்ப ஆட்சி தொடர்பில், எதிரணிகள் விமர்சனங்களை முன்வைத்தபோதிலும், அதனை சிங்கள மக்கள் பெரியதொரு விடயமாகக் கருதவில்லை. சிங்கள மக்கள் மத்தியிலிருந்த, அப்பேரட்ட மனோநிலை, ராஜபக்ஷக்களையே கொண்டாடியது.
யுத்தத்தை வெற்றிகொண்ட ராஜபக்ஷக்கள் – அனைத்தையும் வெல்லக் கூடியவர்கள் என்னும் புரிதலே அவர்களை ஆட்கொண் டது. இந்த அடிப்படையில்தான், ஜனாதிபதி தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷவை, சிங்கள பெரும்பான்மை ஆதரித்தது. இப்போது ஆதரித்தவர்கள் ஒவ்வொருவராக, வெளியில் வந்து, தங்களின் முடிவு தவறானதென்று, வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருக் கின்றனர்.
ராஜபக்ஷக்களால் நாட்டின் நெருக்கடியை எதிர்கொள்ள முடிய வில்லை என்பதை அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்துவிட்டனர். தாங்கள் எதிர்பார்த்தது போன்று, ராஜபக்ஷக்கள் பெரிய கெட்டிக்காரர்கள் அல்லர் – என்னும் உண்மை, சாதாரண சிங்கள மனோநிலையை தொட்டுவிட்டது. இதன் காரணமாகத்தான், ஒரு கட்டத்திற்கு மேல், ராஜபக்ஷக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்ள முடியவில்லை. வழமையான உத்திகளால், சிங்கள இனவாத அரசியலின் மூலம் விடயங்களை கையாள முடியுமென் றால், பஸில் உள்ளிட்ட, ராஜபக்ஷக்கள் பதவியிலிருந்து விலகியிருக்க மாட்டார்கள். மொத்தத்தில் அவர்கள் தங்களின் தோல்வியின்
வாசத்தை முகர்ந்துவிட்டனர். சக இனங்களின் மீதான வெறுப்புக் களால், ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியா தென்பதற்கு ராஜபக்ஷக்களின் ஆட்சி, ஒரு நல்ல படிப்பினையாகும். ஆனால், ராஜபக்ஷக்களின் தோல்வியிலிருந்து, சிங்கள அரசியல் சமூகம், பாடங்களை கற்றுக்கொள்ளுமா என்பதுதான் இங்குள்ள கேள்வி.