25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரி-20: தென்னாபிரிக்காவுக்கு வெள்ளையடித்தது இங்லாந்து

தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடைசி ரி-20 ஆட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ரி- 20 தொடரை இங்கிலாந்து 3-0 என முற்றிலுமாக கைப்பற்றியது.

கேப் டவுன் நகரில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 17.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்து வென்றது. இங்கிலாந்தின் டேவிட் மிலான் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றார்.

நாணயச் சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்காவின் தொடக்க வீரர் டி காக் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 17 ஓட்டங்கள் சேர்த்தார். உடன் வந்த டெம்பா பவுமா 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 32 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் வந்தவர்களில் ரீஸா ஹென்ரிக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 13 ஓட்டங்கள் சேர்க்க, ஓவர்கள் முடிவில் டூ பிளெஸ்ஸிஸ் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 52 ஓட்டங்கள், ராஸீ வான் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2, கிறிஸ் ஜோர்டான் 1 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்து ஆடிய இங்கிலாந்தில் தொடக்க வீரர் ஜேசன் ராய் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 16 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார். ஜோஸ் பட்லர் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 67, டேவிட் மலான் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினர்.

தென்னாபிரிக்க தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே ஒரு விக்கெட் சாய்த்தார். டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்க அணிகள் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles