29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி வெள்ளிகிழமையுடன் ஒப்பிடும்போது, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.02 ரூபாவாகவும், கொள்வனவு விலை 358.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 367.85 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 352.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 425.20 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 408.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles