27 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

லண்டனில் திடீரென தோன்றிய ஒற்றைக்கல்!

லண்டனின் வெல்ஷ் நகரில் ஹே-ஒன்-வை எனும் பகுதியில் உள்ள மலை உச்சியில் திடீரென ஒரு பிரம்மாண்ட மோனோலித் எனப்படும் உலோக ஒற்றைக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வௌ்ளி போல் பளபளப்பாக மின்னும் இந்த மோனோலித் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேற்றுப் பகுதியில் சுமார் 10 அடி உயரத்தில் உள்ள இந்த மோனோலித், திடீரென குறித்த இடத்திற்கு எவ்வாறு வந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்த பொருள் பூமிக்கு அப்பாற்பட்டதாக இருக்குமோ, ஏலியன்களின் வேலையாக இருக்குமோ எனவும் பலர் சமூக ஊடகங்களில் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.

சுமார் 10 அடி உயரம் உள்ள இந்த மோனோலித், ஒரு வகை சொக்லேட் போன்ற வடிவத்தை கொண்டுள்ளது.

மலை உச்சிக்கு அதனை சிலர் கொண்டு சென்று நாட்டியிருக்கலாம் அல்லது ஹெலிகொப்டர் மூலம் அங்கு நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம் என கருத்து வெளியிடப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், இவ்வாறான மோனோலித் தென்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் ஹெலிகாப்டரில் இருந்தவர்களால் ஒரு மோனோலித் கண்டுபிடிக்கப்பட்டு, அது சில நாட்களுக்கு பிறகு அங்கிருந்து காணாமல் போனது.

குறித்த மோனோலித் காணாமல் போன சில நாட்களுக்குப் பிறகு, வைட் தீவில் மற்றொரு மோனோலித் தோன்றியது.

கோர்ன்வால் மற்றும் ஐரோப்பாவின் சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் இதே போன்ற கட்டமைப்புகள் காணப்படுகின்றன.

கிளாஸ்டன்பரி டோர் எனும் இடத்திலும் கடந்த காலங்கில் மோனோலித் தோன்றியிருந்ததுடன், அதன் ஒரு பக்கத்தில் “Not Banksy” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles