கேகாலை, எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாவத்தை தோட்டத்தில் உள்ள 5 வீடுகளை கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்து இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த 55 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினரே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், தீ விபத்தினால் 5 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், வீடுகளில் இருந்த பொருட்களும் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.