தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான லொத்தர் சீட்டு ஒன்றின் இலக்கத்தை தந்திரமாக மாற்றி 2000 ரூபாவை பெற முயன்ற சந்தேகநபர் ஒருவரை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் களுத்துறை மாவட்ட பிரதிநிதி செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர், ஹொரண நகரிலுள்ள விற்பனை பிரதிநிதி ஒருவரை ஏமாற்றி 2000 ரூபா பெற்று மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் பயாகல பிரதேசத்தில் வசிக்கும் இராணுவ முகாமில் பணிபுரியும் ஒருவர் என தெரியவந்துள்ளது.