ரஸ்நாயகபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஸ்நாயக்கபுர போவத்த வீதி – கடிகாவ பிரதேசத்தில் ரஸ்நாயக்கபுரயிலிருந்து போவத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் பயணித்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 25 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொட்டாவ, பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.