பொதுமக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக தமது தலைமை அலுவலகம் மற்றும் அனைத்துப் பிரிவுகளும் உள்ளடங்களாக 265 கிளைகள் வழமை போன்று இயங்கி வருவதாக இலங்கை வங்கியின் (BOC)பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இன்று காலை 10.30 மணி நிலைவரப்படி, 75%இற்கும் அதிகமான பணியாளர் வருகையுடன், 340 கிளைகளில் 272 கிளைகள் முழுமையாக இயங்கி வருவதாக மக்கள் வங்கியின் தலைவரும், பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கிளைவ் பொன்சேகா உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒத்துழைக்கும் நோக்கில் எந்த தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை என்று மின்சார சபை காசாளர் சங்கம், மின்சார சபை பொது முகாமையாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.