வடகிழக்கு மாகாணத்தில் சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக வாணிபத்துறை பதில் அமைச்சரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சதோச விற்பனை நிலையங்களை மேம்படுத்துவது குறித்தான விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திதில் நடைபெற்றது.
சதோச அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் அதிகாரிகள்,சதோச விற்பனை நிலையங்களின் முகாமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் புதிய சதோச விற்பனை நிலையத்தினை நிறுவுவது குறித்தும் நஸ்டத்தில் இயங்கும் நிலையங்களை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன் வறிய மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சதோசவினை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.