வட மாகாண மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் 15 தங்கப் பதக்கங்களை சுவீகரித்து வரலாறு படைத்தது!

0
58

வட மாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தினால் முல்லைத்தீவு உள்ளக அரங்கில் நடத்தப்பட்ட இந்த வருடத்திற்கான வட மாகாண மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் வழங்கப்பட்ட 20 தங்கப் பதக்கங்களில் 15 தங்கப் பதக்கங்களை முல்லைத்தீவு மாவட்டம் சுவீகரித்து வரலாறு படைத்தது.

வட மாகாண மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் தொடர்ந்து 6ஆவது வருடமாக சம்பியன் பட்டத்தை சூடி மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது.

பெண்கள் அணியினர் 10 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

ஆண்கள் அணியினர் 5 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்தனர்.

பெண்கள் பிரிவில் பதக்கங்கள் வென்றவர்கள்

தங்கப் பதக்கங்கள் (10)

கே. சனுஜா, கே. திலக்ஷிகா, எஸ். அஜித்தா, ஆர். தயாளினி, ரீ. ஜெனீஸ்வதி, ஆர். சன்சிகா, எஸ். பவித்திரா, எல். சங்கவி, எஸ். அனுசிகா, எஸ். சன்சிகா.

வெள்ளிப் பதக்கம் (1)

எம். காயத்திரி.

ஆண்கள் பிரிவில் பதக்கங்கள் வென்றவர்கள்

தங்கப் பதக்கங்கள் (5)  

எஸ். விபுர்ஜன், ஜே. கஜந்த், ஜே. வினோஜன், ஆர். அபிஷங்கன், கே. திஷாந்தன்.

வெள்ளிப் பதக்கங்கள் (3)

எஸ். ராஜிதன், ரீ. சங்கீர்த்தனன், எஸ். மாதுளன்.

இப் போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டம் (3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) இரண்டாம் இடத்தையும், வவுனியா மாவட்டம் (2 தங்கள், 2 வெற்றி, 2 வெண்கலம்) மூன்றாம் இடத்தையும் பெற்றன.