வன விலங்குகளால் உணவுப் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் செயற்படுத்தவுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வன விலங்குகளினால் 30 தொடக்கம் 40 வீதமான பயிர்கள் சேதமடைவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களைத் தடுப்பதற்கு உரிய பணி ஆணையை இரண்டு மாதங்களுக்குள்
நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.