வரவு செலவுத் திருத்தச் சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில்

0
152

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

பாராளுமன்றம் நாளை பிற்பகல் 01 மணிக்கு கூடவுள்ளதுடன், விவாதம் எதிர்வரும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, வரவு செலவுத் திருத்தச் சட்டமூலமும் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.